இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார்.
இந்தப் படத்தில் அனிருத் இசையில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தப் பட இறுதிகட்ட பணிகளின்போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒவ்வொருமுறை படத்தை உருவாக்கும்போதும் கடைசி நாட்கள்தான் சிறந்த நாட்களாக இருக்கும்.

நான் தொடர்ச்சியாக அனிருத்துடன் நேரத்தை செலவிட்டேன். நடிகர்களின் சிறப்பான நடிப்பினால் ஒவ்வொரு காட்சியும் உயிர்பெறுவதைப் பார்த்தேன். இந்த நாட்களில் நான் வாழ்ந்தேன். கடைசி 5 நாட்கள் என் பேபி மற்றும் என் காதலான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துடன் நேரம் செலவிட்டேன்.
இந்தப் படத்துக்காக அதிக காதலும், நேசமும் கொண்டு உழைத்திருக்கிறேன். இதனை திரும்பபெறும்போது இருக்கும் வலியானது என்னுள் தொடங்கியிருக்கிறது. மிகவும் வலிமிகுந்தது. ஆனால் வலி தேவைதான். காரணம் வலியில்லாமல் காதலில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லம்? சூசகமாக அறிவிப்பு!

சினிமாவில் கிடைக்காத அங்கீகாரம் சின்ன திரையில் கிடைத்தது! சந்தோஷ் பிரதாப் நெகிழ்ச்சி

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் கதையை இயக்கும் ராம் கோபால் வர்மா!

திமுக - பாஜக கூட்டணி உருவாகிறதா? வானதி சீனிவாசன் பதில்
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



