அமேசான் பிரைம் ஓடிடியில் உருவாகும் புதிய தமிழ் இணையத் தொடர்கள்: அறிவிப்பு

அமேசான் பிரைம் ஓடிடியில் உருவாகும் புதிய தமிழ் இணையத் தொடர்கள்: அறிவிப்பு

ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகும் இணையத் தொடர்கள் பற்றிய அறிவிப்பை


ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகும் இணையத் தொடர்கள் பற்றிய அறிவிப்பை அமேசான் பிரைம் ஓடிடி வெளியிட்டுள்ளது. 

அடுத்த 2 வருடங்களில் 40 இணையத்தொடர்கள், படங்களை வெளியிடவுள்ளது. 

தமிழில் வெளியாகவுள்ள இணையத்தொடர்கள்: 

சுழல்

பிரம்மா, அனுசரண் இயக்கும் சுழல். தயாரிப்பு - புஷ்கர், காயத்ரியின் வால்வாட்சர் ஃபிலிம்ஸ்.

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி.

தி வில்லேஜ்

அவள், நெற்றிக்கண் படத்தை இயக்கிய மிலிந்த் இயக்கும் தி வில்லேஜ். ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் போன்றோர் நடிக்கிறார்கள். 

வதந்தி

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் வதந்தி. தயாரிப்பு - புஷ்கர், காயத்ரியின் வால்வாட்சர் ஃபிலிம்ஸ்.

எஸ்.ஜே. சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா நடிக்கிறார்கள்.

மாடர்ன் லவ் சென்னை

6 கதைகள் கொண்ட ஆந்தாலஜி தொடரைப் பிரபல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தயாரிக்கிறார். பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜு முருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்‌ஷய் சுந்தர் போன்றோர் இக்கதைகளை இயக்குகிறார்கள். கிஷோர், ரம்யா நம்பீசன், அசோக் செல்வன், ரிது வர்மா, விஜயலட்சுமி போன்றோர் நடிக்கிறார்கள். இது மாடர்ன் லவ் தொடரின் தமிழ் வடிவம். 

ஸ்வீட் காரம் காபி 

இயக்கம் - பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, ஸ்வாதி ரகுராமன். நடிப்பு - லட்சுமி, மதுபாலா, சாந்தி பாலசந்திரன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com