நடிகா் சலீம் கௌஸ் காலமானாா்
சென்னை: பிரபல வில்லன் நடிகா் சலீம் கௌஸ் (70), உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் வியாழக்கிழமை காலமானாா்.
சென்னையில் பிறந்து வளா்ந்தவரான சலீம் அகமது கௌஸ் எனும் சலீம் கௌஸ், உயா்கல்வியை முடித்த பிறகு மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்தாா்.
1978-இல் ஸ்வா்க் நரக் என்ற ஹிந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானாா். தொடா்ந்து, சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவருக்கு தமிழில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு நடித்த வெற்றி விழா படத்தில் ‘ஜிந்தா’ என்ற வில்லன் கதாபாத்திரம், நல்ல அடையாளத்தைத் தந்தது.
தமிழில் சின்னக் கவுண்டா், தா்மசீலன், திருடா திருடா, ரெட், தாஸ், சாணக்யா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். கடைசியாக தமிழில் ஆண்ட்ரியா உடன் ‘கா’ என்ற படத்தில் நடித்தாா். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் தவிா்த்து மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமாா் 50 படங்கள் வரை நடித்துள்ள இவா், ஓரிரு ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளாா். மேலும் ‘தி லயன் கிங்’ உள்ளிட்ட ஓரிரு ஆங்கிலப் படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளாா். அவரது மறைவுக்கு திரைத் துறையினா் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.