தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தனக்கு நகைச்சுவையாக இருப்பதாக அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜான் ஆப்ரஹாம் நினைவு விருது வழங்கும் விழாவில் பழம்பெரும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, ''சினிமாவை கலை வடிவமாக பார்க்கவேண்டும். தேசிய விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருப்பவர்கள் ஹிந்தி பட ரசிகர்களாக இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் சொன்னார், விருதைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருப்பவர்கள் 2 படங்களைப் பார்ப்பதற்கே சலிப்படைகிறார்களாம். அவர்களுக்கு சினிமா குறித்த அடிப்படை அறிவு இருப்பதில்லை.
இதையும் படிக்க | ஏற்கனவே திருமணமானதை மறைத்து வாலிபரை ஏமாற்றிய நடிகை
தேசிய விருது இப்பொழுது மோசமான நகைச்சுவையாக மாறியிருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு என்ன அளவுகோல் என்று தெரியவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஹிந்தி பட ரசிகர்களாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர்கள், விமர்சகர்கள் நடுவர்களாக இருந்தார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் என 5 விருதுகள் கிடைத்தன.
மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், பாடகி, சண்டை இயக்கம் ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை அள்ளியது.
தன்ஹாஜி படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யாவுடன் இணைந்து அஜய் தேவ்கன் பெற்றார். அஜய் தேவ்கனுக்கு விருது அளிக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple

ஜிடிஎன் படத்தில் ரங்கநாயகி கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன்!

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்த உதயநிதி!

இலங்கைச் சென்றடைந்த இந்திய அணியினர்..! 9 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் டெஸ்ட் தொடர்!
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple



