
நடிகை சமந்தா முதன்முறையாக மலையாள படமொன்றில் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
ஃபேமிலி மேன் 2 தொடருக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறார் சமந்தா. சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்ஷய் குமாருடன் சமந்தா கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் திருமணம், விவாகரத்து குறித்து சமந்தாவின் கருத்துகள் வைரலாகின. சகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ள சமந்தா, அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் இணைகிறார்.
இதையும் படிக்க | அதர்வாவின் 'குருதி ஆட்டம்' - படம் எப்படி இருக்கிறது?
இந்த நிலையில் நடிகை சமந்தா மலையாளத்தில் முதன்முறையாக களமிறங்கவிருக்கிறாராம். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை சமந்தா கிங் ஆஃப் கோதா என்ற படத்தில் நடிக்கிறார். அபிலாஷ் ஜோஷி என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஏற்கனவே துல்கர் சல்மானுடன் இணைந்து மகாநடி படத்தில் சமந்தா நடித்திருந்தார். அந்தப் படத்தில் இருவருக்குமான காட்சிகள் குறைவாகவே இருக்கும். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மலையாளத்திலும் தனது தடத்தை அழுத்தமாக பதிப்பார் என நம்புவோம்.