'6 ஆண்டுகளாக கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தினார்' - நித்யா மேனன் அதிர்ச்சி தகவல்

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாக நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
'6 ஆண்டுகளாக கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தினார்' - நித்யா மேனன் அதிர்ச்சி தகவல்

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாக நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை நித்யா மேனன் தமிழில் தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 18 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நித்யா மேனன் கலந்துகொண்டு பாடல்கள் பாடி அசத்தினார். 

முன்னதாக விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் இணைந்து நடித்த 19(1)(ஏ) என்ற மலையாளத் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகியிருந்தது. இந்தப் பட நிகழ்வில் இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

சந்தோஷ் வர்க்கி என்பவர் நடிகை நித்யா மேனனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக பேசியது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நித்யா மேனன், அவர் சொல்வதை நம்பினால் நீங்கள் முட்டாள். அவர் என்னைப் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வருகிறார். 

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக என்னையும் என் அப்பா, அம்மாவையும் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தொந்தரவு செய்தார். 

என் அம்மா புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் தொலைபேசி வாயிலாக அழைத்துபேசுவார். இதனால் அவர் அழைத்தால் அவரது எண்ணை பிளாக் செய்துவிடுங்கள் என்றேன். அவரது 30க்கும் மேற்பட்ட எண்களை பிளாக் செய்திருக்கிறோம் என்றார். 

அவரது பேச்சுக்கு பதிலளித்துள்ள சந்தோஷ் வர்க்கி, நித்யா மேனனிடம் 2009 முதல் 2021 வரை பழகினேன். 30க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து அழைத்ததாக சொல்கிறார். இந்திய சட்டப்படி ஒருவருக்கு எத்தனை சிம் கார்டு எடுக்க முடியும் என்பது மக்களுக்கு தெரியும். என் தந்தை மறைவுக்கு பிறகு நான் உண்டு, என் வேலையுண்டு என இருக்கிறேன். நித்யா மேனனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com