புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததற்குப் பின் பிரபலமான இவர் தெலுங்கில் முக்கிய நடிகர்களின் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.
அந்த வகையில், அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்து ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘புஷ்பா’ படத்தில் நாயகியாக நடித்து ராஷ்மிகா அதிகமான ரசிகர்களைக் கவர்ந்ததுடன் அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.
இதையும் படிக்க: 'மோடிஜீக்கு ஜே’ என்றாலே விருது நிச்சயம்: பார்த்திபன்
அதனைத் தொடர்ந்து, தமிழில் சுல்தான் திரைப்படத்தில் அறிமுகமானர். ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதால் அந்தப் பாகத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா தன் சம்பளத்தை ரூ.1 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இவரை ஒப்பந்தம் செய்யக் காத்திருந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது, ராஷ்மிகா நடிகர் விஜயுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது

ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


