
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்
சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
முன்னதாக, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் ‘டப்பிங்’ பணிகள் முடிவடைந்திருந்த நிலையில் தற்போது அப்படத்தின் ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 6.21-க்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
#MarakkumaNenjam from #VendhuThanindhathuKaadu releasing On Aug 14th 6:21 PM https://t.co/XCGvGmKZVs
— Silambarasan TR (@SilambarasanTR_) August 11, 2022