விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்ன சொன்னார் என்கிற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது.
இப்படம் திரையரங்கில் வெளிவந்த நாள் முதல் ஓடிடியில் வெளியானது வரை ரசிகர்களின் தொடர் பாராட்டுகளைப் பெற்றதுடன் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனையையும் படைத்துள்ளது.
இதையும் படிக்க: ஆபாசமாக பேசியவருக்கு பதிலடி கொடுத்த சுனிதா
இந்நிலையில், சமீபத்தில் இளம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், ‘விக்ரம் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் என்ன சொன்னார்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு லோகேஷ், ‘படம் வெளியானபோது இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் இருந்தேன். மாலையில் செல்போனை பார்த்தபோது விஜய் சார், பிரமிப்பாக இருந்தது - மைண்ட்ஃப்ளோயிங் (mindblowing) என செய்தி அனுப்பியிருந்தார். அவர் இரண்டு முறை அப்படத்தைப் பார்த்துவிட்டார்’ என பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


