
பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் அசோக்செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தினை ரஞ்சித்தின் உதவி இயக்குநர் ஜெய்குமார் இயக்கவுள்ளார்.
நயன்தாரா நடித்த ‘ஓ2’, ரஞ்சித் இயக்கிய ‘தம்மம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஒளிப்பதிவாளர் தமிழழகன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து நண்பர்களின் நட்பினை கொண்டாடும் வகையில் அரக்கோணம் அதைச்சுற்றியுள்ள உள்ளூர் மக்களை வைத்து படமாக்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G