
திரையரங்குகளில் வெளியான நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிலவியது.
இதையும் படிக்க | தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட தமிழ் பட நடிகை
இந்தப் படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவருவதாக தெரிகிறது. இதன் காரணமாக இந்தப் படம் இரண்டு நாட்களில் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாம். படத்துக்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்களால் முதல் நாளை விட இரண்டாவது நாள் வசூல் இன்னும் அதிகரித்துள்ளது.
மேலும் 3 நாட்கள் தொடர் விடுமுறை இந்தப் படத்துக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது. இன்றும் நாளையும் இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...