
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துவரும் பத்து தல படப்பிடிப்புத் தள விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி என்ற திரைப்படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் உருவாகிவருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார்.
சிவராஜ்குமார் வேடத்தில் சிம்பு நடிக்க கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இதையும் படிக்க | ஆர்யாவின் 'கேப்டன்' டிரெய்லர் வெளியானது
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புதளத்தில் சிம்பு மற்றும் நடிகை அனு சித்தாரா இருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
#PathuThala BTS#SilambarasanTR (AGR)
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 21, 2022
If U Watched #Mufti Movie Then u Will Know About This Emotional scene
Brother & Sister of PathuThalapic.twitter.com/pE8M8S9jI4