புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஹீரோயின்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் முக்கிய தகவலை நாயகி மரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 7:48 am

DIN

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் முக்கிய தகவலை நாயகி மரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தெலுங்கில் வெற்றிபெற்ற ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார். 

தெலுங்கு, தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரித்துவருகின்றன.

மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளாக இந்தப் படத்தின் நாயகி மரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

Story image

அவரது பதிவில், பிரின்ஸ் படத்தின் படப்பபிடிப்பு நிறைவு பெற்றது. மறக்க முடியாத பயணம். நான் 4 மாதங்கள் வேறு ஒரு நாட்டில் சிறந்த மனிதர்கள் சூழ இருப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. இவர்கள் அளவிட முடியாத அளவுக்கு சிறந்த படைப்பாளிகள். நண்பர்களுடன் இருப்பதாகவே உணர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாடல் பதிவுடன் நிறைவுபெற்றுள்ளது. முதலில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பிரின்ஸ் திரைப்படம், பின்பு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர், டான் என தொடர் வெற்றிகளுக்கு பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.