தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

விஜய்யின் 'வாரிசு' படத்தில் பிக்பாஸ் நடிகர் - வெளியான புகைப்படம்

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் 'வாரிசு' படத்தில் நடிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார். 

Published On :

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் 'வாரிசு' படத்தில் நடிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார். 

விஜய்யின் 'வாரிசு' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி தயாரிப்பு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிவருகிறது. 

இந்த மாதத்தில் மட்டும் 3 முறை வாரிசு படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினருக்கு தயாரிப்பு தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாம். 

இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், ''விஜய்யுடன் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டு ஒப்பனை செய்யும் விடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். 

Story image

'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, ஸ்ரீகாந்த், சரத்குமார், குஷ்பு, சங்கீதா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படமாக வாரிசு படம் உருவாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.