தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

5 மொழிகளில் உருவாகிறது சூர்யா 42!

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் 5 மொழிகளில் உருவாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா

Published On :

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் 5 மொழிகளில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் படத்தில் நடித்துவந்தார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

இதனிடையே, சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படம் பாதியில் நிற்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் மறுப்பு தெரிவித்தது. 

இந்த நிலையில் வணங்கான் படத்தை மீண்டும் துவங்குவதற்கு முன் சிவா படத்தில் நடித்துமுடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார். சூர்யாவின் 42 படமான இதில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

மேலும், இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் அடுத்த வாரம் சூர்யா 42-இன் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.