பாஜகவினரைப் பார்த்து நாங்கள் அஞ்சமாட்டோம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா திங்கள்கிழமை (ஆக. 17) தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், பாங்குரா மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் மோசமான நிலையை ஷேக் அப்துல் ஹாஃபிஸ் என்ற சிஜேபி தன்னார்வலர் விடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டித்து, அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரின் வீட்டுக்குச்சென்று அவருடைய குடும்பத்தினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஷேக் அப்துல் ஹாஃபிஸ் மற்றும் அவரின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஷேக் அப்துல் ஹாஃபிஸின் தந்தை சிகிச்சைப் பலனின்றி ஆக. 15 ஆம் தேதி பலியானார்.
இந்த நிலையில், ஷேக் அப்துல் ஹாஃபிஸின் வீட்டுக்கு இன்று (ஆக. 17) நேரில் சென்று சந்தித்த அசுதோஷ் ரங்கா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இது சிஜேபியின் பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டின் பொறுப்பு. கல்வி சீர்திருத்தத்துக்காக நாட்டில் உள்ள யார் போராடினாலும் அவர்களுடன் சிஜேபி துணை நிற்கும். அவர்களுக்கு சிஜேபி ஆதரவு தரும்.
பாஜகவினரைப் பார்த்து நாங்கள் அஞ்சமாட்டோம். இந்த வன்முறைத்தனத்தை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. நாட்டில் எங்கிருந்தாலும் பாஜக தொண்டர்கள் வன்முறையின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியும் என்று நினைத்தால், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாஜக மறுத்து வரும் நிலையில், மேற்கு வங்க காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) எட்டு பேரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Ashutosh Ranga, spokesperson for the Cockroach Janata Party (CJP), stated on Monday (Aug. 17) that they would not be intimidated by the BJP.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக துணைநிற்கும் சிஜேபி: சௌரவ் தாஸ்

தமிழில் வாழ்த்து தெரிவித்த CJP-ன் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்! | Delhi

சிஜேபியுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நிறைவு!

தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் நாங்கள் தொடர்பில் இல்லை! சிஜேபி
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK




