
பிரதமர் மோடியை சித்திரித்த படங்களை நீக்க உத்தரவு; சிஜேபி தலைவர்களுக்கு நோட்டீஸ்!
பிரதமர் மோடியை தவறாக சித்திரித்த படங்களை நீக்க சிஜேபி தலைவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவர்களான சௌரவ் தாஸ், அபிஜித் தீப்கே.
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு பெண் இருப்பது போன்ற மார்பிங் செய்யப்பட்ட அவதூறான படங்களை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க மெட்டா நிறுவனத்திற்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறியும் அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் தலைநகர் தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டத்தின்போது விமானத்தில் பிரதமர் மோடி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்று சித்திரித்து சமூக வலைத்தளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பதிவிட்டு விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி அந்தப் பெண்ணுடன் இருக்கும் சித்திரிக்கப்பட புகைப்படத்தை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பெண் கூறிய நிலையில், அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கவும் தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அப்பெண் தாக்கல் செய்த மனுவின் பேரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவர்களான சௌரவ் தாஸ், அபிஜித் தீப்கே, அஷுதோஷ் ரங்கா மற்றும் ரத்னா சிங் ஆகியோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Summary
The Delhi High Court on Friday directed Meta Platforms to immediately remove objectionable social media content containing a woman's morphed picture alongside Prime Minister Narendra Modi and ordered the Delhi Police to provide her complete protection after she said she was receiving threats to her life.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





