
சூரரைப் போற்று பட ஒளிப்பதிவாளருக்கும் பிரபல நடிகைக்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று திரைப்படம் சமீபத்தில் 5 தேசிய விருதுகளை அள்ளியது. இந்தப் படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
நிகேத் பொம்மி சமீபத்தில் நானி, நஸ்ரியா இணைந்து நடித்த அன்டே சுந்தரானிக்கி படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தில் அவரது பணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்க | 'இந்தியன் 2'வில் விவேக்கிற்கு பதிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா ?
இந்த நிலையில் இவருக்கும் தெலுங்கு நடிகை மெர்சி ஜான் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
மெர்சி ஜான் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான மாடர்ன் லவ் இணையத் தொடரில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு படங்களில் பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றிவருகிறார்.