வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ரஜினியின் ஜெயிலரில் நடிக்கும் நடிகர்கள் - சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ தகவல்

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 11:21 am

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதனை முன்னிட்டு ஜெயிலர் பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் அடிக்கடி வெளியான நிலையில் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

Story image
Story image

படையப்பா படத்துக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story image
Story image

குறிப்பாக படையப்பாவில் ரஜினியிடம், வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டுப்போகல என்ற வசனம் பேசியிருப்பார். Lற்போது ஜெயிலர் படத்திலும் அந்த வசனம் இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.