
சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்திருந்த பிரகர்ஷிதா தனது மகளின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த சந்திரமுகி படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. 90களின் குழந்தைகளால் அவ்வளவு எளிதில் அந்தப் படத்தை மறந்துவிட முடியாது.
பாபா தோல்விக்கு பிறகு நான் யானை இல்ல, குதிரை, விழுந்தா உடனே எழுந்துடுவேன் என ரஜினிகாந்த் சொல்லியடித்த படம் சந்திரமுகி. இந்தப் படத்தின் பாடல்கள், வடிவேலு நகைச்சுவைப் பகுதி என மறக்க முடியாத படமாக சந்திரமுகி இருக்கிறது.
இதையும் படிக்க | ’பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம்
இந்தப் படத்தில் அத்திந்தோம் என்ற பாடலில் ரஜினியுடன் அழகாக பொம்மி என்ற சிறுமி நடனமாடியிருப்பார். பிரகர்ஷிதா என்ற பெயருடைய அவர் வேலன், ராஜராஜேஷ்வரி போன்ற சன் டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆகாஷ் முரளி என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் தனது மகளின் படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துள்ளார்.