இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

'இந்தியன் 2' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் ஷங்கர் - உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்தியன் 2 சர்ச்சை குறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:39 pm IST

இந்தியன் 2 சர்ச்சை குறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். 

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து உள்ளிட்ட எதிர்பாராத நிகழ்வுகளால் பாதியில் நின்றதன் காரணமாக ராம் சரண் படத்தை இயக்குநர் ஷங்கர் துவங்கினார். ஆர்சி15 என்று அழைக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. 

இந்தப் படத்தை வாரிசு படத்தை தயாரிக்கும் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேசன்ஸ் சார்பாக தயாரிக்கிறார். முதன்முறையாக இயக்குநர் ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்க, கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். 

ஆர்சி15 பட அப்டேட் எதுவும் வெளியாகாததால் ராம்சரண் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதற்கிடையே இந்தியன் 2 படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதன் காரணமாக ராம் சரண் படம் மேலும் தாமதமாகலாம் என சர்ச்சை உருவானது. 

இதற்கு இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். அதில், இந்தியன் 2 மற்றும் ஆர்சி15 படங்கள் ஒரே நேரத்தில் படமாக்கப்படவிருக்கின்றன. செப்டம்பர் முதல் வாரத்தில் ஆர்சி 15 படப்பிடிப்பை ஹைதரபாத் மற்றும் விசாகபட்டணத்தில் நடத்த தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.