
நடிகர் கமல்ஹாசன் தனக்குப் பிடித்த நாயகன் என பிரபல தெலுங்கு நடிகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பிரம்மாஸ்த்ரா’ படத்தின் புரோஷன் பணிகளுக்காக ரன்பீர் கபூர், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் நாகர்ஜூனா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.
அப்போது, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா ‘சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவதைப் போல. விக்ரம் திரைப்படம் பார்த்தேன். தமிழ் சினிமாவின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. கமல் சார் எனக்குப் பிடித்த நாயகன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிற நடிகர்களுடன் நடிகர் அஜித்தை ஒப்பிட்டு பேசிய ரன்பீர் - வைரலாகும் விடியோ
நாகர்ஜூனா தமிழில் ரட்சகன், பயணம், தோழா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கியுள்ளதால் நடிகர் கமல்ஹாசன் அப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கிறார்.
’பிரம்மாஸ்த்ரா’ திரைப்படம் வருகிற செப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது