
சின்னத்திரை படப்பிடிப்பில் உதவி இயக்குநரை நடிகர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் தொடர் சென்னையிலுள்ள மதுரவாயலில் நடைபெற்றுவந்திருக்கிறது. அப்போது தொடரில் நாயகனாக நடித்துவரும் நவீன் உதவி இயக்குநரை தாக்கிவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
உதவி இயக்குநர் குணசேகரன் நடிகர் நவீனை படப்பிடிப்புக்கு நேரமாகிவிட்டதாக அழைத்திருக்கிறார். அதற்கு நவீன் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குணசேகரனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையும் படிக்க | ''என் இனிய....'' - பாரதிராஜா குணமாக நடிகை ராதிகா உருக்கமாக பிரார்த்தனை
இதனையடுத்து குணசேகரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் நடிகர் நவீன் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நடிகர் நவீன் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.