பிரபல நடிகை ஒருவர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியும், பிரபல நடிகையுமான அனுசுயா 'ரங்கஸ்தலம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' படம் தொடர்பாக எதிர்மறை விமர்சனத்தை அனுசுயா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அவரைத் திட்டி பதிவிட்டனர்.
இதையும் படிக்க | ஜெயிலருக்கு பிறகு இளம் இயக்குநருடன் இணையும் ரஜினிகாந்த் ?
ஒரு சிலர் ரசிகர்கள் அவரது வயதைக் காரணம் காட்டி ஆண்ட்டி என அழைத்தனர். இதனயைடுத்து ''தனக்கு 37 வயதுதான் ஆகிறது, என்னை அப்படி அழைக்காதீர்கள்'' என அனுசுயா பதிவிட, தொடர்ச்சியாக ரசிகர்கள் அவரை ஆண்டி என்றே அழைத்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, ''இது பெண்களை துன்புறுத்தவதற்கு சமம், தொடர்ந்து என்னை அப்படி அழைத்தால் அதனை ஸ்கீரின்ஷாட் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன். இது என் கடைசி எச்சரிக்கை'' என்று அனுசுயா பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!

வணிகமயத்தின் பிடியில்...

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றமில்லை: நிா்மலா சீதாராமன்

மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



