படம் ஓடாததற்கு ஹீரோவின் திமிர் பேச்சுதான் காரணம் என பிரபல திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக லைகர் படத்தைப் புறக்கணியுங்கள் என்று கூறி பாய்காட் லைகர் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர். இதுகுறித்து விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது 'என் படத்தைப் பிடித்தால் பாருங்கள்' என்று கூறியிருந்தார்.
இதையும் படிக்க | விஷாலின் பிறந்த நாள் பரிசாக வெளியானது 'மார்க் ஆண்டனி' முதல் பார்வை

திரையரங்க உரிமையாளர் மனோஜ் தேசாயுடன் விஜய் தேவரகொண்டா
இந்த நிலையில் படம் ஓடாததற்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சுதான் காரணம், நடிகர்கள் ரசிகர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் மனோஜ் தேசாய் தெரிவித்தார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைக் கேள்விப்பட்ட விஜய் தேவரகொண்டா உடனடியாக மும்பை விரைந்து மனோஜ் தேசாய்யை சந்தித்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









