
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் செப்.6 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6 ஆம் தேதி பொன்னியின் செல்வன் டிரைலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது, இசை மற்றும் டிரெயிலர் பிரமாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஐமேக்ஸ்’ தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பொன்னியின் செல்வன் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.