

மலையாளம், கன்னட மொழிகளில் இசைமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜான் பி.வர்கீ உடல் நலக்குறைவால் காலமானார்.
மலையாளத்தில் உன்னா, மசாலா ரீபப்ளிக், ஈடா, கம்மட்டிபாடம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் கிட்டாரிஸ்ட் ஜான் பி.வர்கீ(51).
கேரளத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கன்னடத்திலும் சில படங்களுக்கு இசையமைத்ததுடன் சில ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். கம்மட்டிபாடத்தில் இடம்பெற்ற ‘புழு புலிகள்’ பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் ஜான் மரணமடைந்தார்.
அவருடைய மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.