
‘ரத்தம்’ பட டீசரில் முன்னணி இயக்குநர்கள் சிறப்புத் தோற்றத்தில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடிக்க உள்ளனர்.
இதையும் படிக்க- வாரிசு திரைப்பட 2ஆவது பாடல் வெளியீடு எப்போது? படக்குழு அறிவிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘ரத்தம்’ பட டீசரில் முன்னணி இயக்குநர்கள் சிறப்புத் தோற்றத்தில் இடம் பெற்றுள்ளனர். டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த டீசர் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...