உண்மையான குடும்பம் போல... 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு கிடைக்கும் பாராட்டு!

கோலங்கள், திருமதி செல்வம் ஆகிய மெகா ஹிட் தொடர்களை இயக்கிய திருச்செல்வம் 'எதிர்நீச்சல்' தொடரை இயக்கி வருகிறார்.
எதிர்நீச்சல் தொடரில் ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி
எதிர்நீச்சல் தொடரில் ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி
Published on
Updated on
2 min read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடர் உண்மையான குடும்பத்தைப் பார்ப்பது போன்று உள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

கோலங்கள், திருமதி செல்வம் ஆகிய மெகா ஹிட் தொடர்களை இயக்கிய திருச்செல்வம் 'எதிர்நீச்சல்' தொடரை இயக்கி வருகிறார். மக்கள் மனங்களைப் புரிந்து தொடரின் காட்சிகளை அமைப்பதில் வல்லவர் திருச்செல்வம்.

அந்தவகையில் அவர் தற்போது இயக்கி வரும் 'எதிர்நீச்சல்' தொடர், சமீபகாலத்தில் இளம்பெண்கள் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து தொடரை நகர்த்தி வருகிறார். 

திருமணத்திற்கு பிறகு மாமியார் வீட்டில் பிரச்னைகளை சந்திக்கும் மருமகள்களின் கதைகள் பல வந்திருந்தாலும், தற்கால பெண்களுக்கு தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் இருப்பதால் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இதில் வரும் மாமனார் கதாபாத்திரம் இளசுகளின் மீம்ஸ் டெம்ப்ளேட்டாகவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த அளவுக்கு இளம் தலைமுறையினரையும் 'எதிர்நீச்சல்' தொடர் கவர்ந்துள்ளது. 

இந்நிலையில், 'எதிர்நீச்சல்' தொடர் அசலான குடும்பத்தைப் பார்ப்பது போன்று உள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் எங்கு இருந்து முக்கியமான விஷயங்களைப் பேசினாலும், அது அடுப்படியில் நின்று பேசுவதைப் போல ஆகாது, என்று பலர் எதிர்நீச்சலில் வரும் சமையலறைக் காட்சிகளை சிலாகித்து வருகின்றனர். 

இந்த தொடர், சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு 'எதிர்நீச்சல்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திருச்செல்வம் இயக்க ஸ்ரீவித்யா வசனங்களை எழுதுகிறார். 

மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com