திருமணம் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை தமன்னா.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
எல்லா நடிகைகளை போலவே, இவரையும் அடிக்கடி திருமண கிசுகிசுவில் ரசிகர்கள் சிக்க வைப்பது வழக்கம். அப்படி போலியான செய்திகள் பரவும் போதெல்லாம் அதை மறுத்து தமன்னா கருத்து தெரிவித்து வந்தார்.
இதையும் படிக்க | பொன்னியின் செல்வன் ‘சொல்’ பாடல் விடியோ வெளியானது!
தற்போது மீண்டும் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், அதுகுறித்துப் பேசிய அவர் “ நான் நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு காலம் நீடித்திருப்பேன் என நினைத்ததில்லை. அதேநேரம் திருமண வயது வந்த உடன் திருமணத்தைப் பற்றி கேட்க துவங்குவார்கள். என் வீட்டிலும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், நான் அதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போது, தொழிலதிபருடன் எனக்குத் திருமணம் என செய்தி பரப்புகிறார்கள். இது முழுக்க வதந்தி. அப்படி எதாவது நடந்தால் நானே அதைத் தெரிவிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


