விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ராட்சசன், எஃப்ஐஆர் திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பாலியல் புகார்: ‘ஸ்குவிட் கேம்’ நடிகரிடம் விசாரணை
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, குஸ்தி தெரிந்த ஐஸ்வர்யா லக்ஷ்மியின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்நிலையில், கட்டா குஸ்தி திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.35 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் தயாரிப்பில் மீண்டும் அவருக்கு ஒரு வெற்றிப்படம் கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.