தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தற்போது, நடிகர் விஜய் உடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து விட்டார். அவர் முதன்முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டதாக கன்னட ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர். ராஷ்மிகாவின் முதல் படம் கிர்க் பார்டி எனும் கன்னட படத்தை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி. சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாகிய ‘காந்தாரா’ படத்தினை இயக்கியவரும் இவர்தான் ரிஷப் ஷெட்டி.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் காந்தாரா படத்தினை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு இன்னும் பார்க்கவில்லை என பதிலளிப்பார். இதனால் கன்னட ரசிகர்கள் ராஷ்மிகாவை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர். மேலும் இனிமேல் கன்னட படத்தில் ராஷ்மிகா நடிக்க கூடாதெனவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து ராஷ்மிகா கூறியுள்ளதாவது:
என்னை விமர்சிப்பவர்களுக்கு என்னிடம் இருந்து தருவதற்கு அன்பை தவிர எதுவுமில்லை. காந்தாரா வெளியான 2-3 நாட்களிலே படத்தை பார்த்து விட்டீர்களா என கேட்டார்கள். அப்போது பார்க்க முடியவில்லை. பிறகு படம் பார்த்துவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து கூறினேன். அவர்களும் நன்றி தெரிவித்தனர். எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் காமிரா வைத்து வெளியே காட்ட முடியாது.
#RashmikaMandanna on Trolls and also clarifies she did actually watch #Kantara recently! pic.twitter.com/9jqGM68E6G
â AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) December 8, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



