
நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையும் படிக்க: உடல் எடையைக் குறைத்த விஜய் சேதுபதி!
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாள்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாள்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.