
நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி தனது 72-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளில் புதுப்பொழிவுடன் பாபா மறுவெளியீடு செய்யப்பட்டது. அதேபோல், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலிருந்து முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திர அறிமுக விடியோவும் வெளியானது.
இதையும் படிக்க | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு: எங்கு, எப்போது தெரியுமா?
இந்நிலையில், பிறந்த நாளன்று தனது பேரக் குழந்தைகளான லிங்கா மற்றும் யாத்ராவுடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தள்ளார்.
இந்த புகைப்படத்தை ரஜினியின் ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.