’இந்தியன் - 2’ கதை இப்படித்தான் இருக்கும்: ஜெயமோகன்

இந்தியன் 2 படத்தின் கதை குறித்து பேசியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
’இந்தியன் - 2’ கதை இப்படித்தான் இருக்கும்: ஜெயமோகன்

இந்தியன் 2 படத்தின் கதை குறித்து பேசியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு பிகாரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் ஒன்றில் “இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் பட்டினி கிடந்து நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்திலும் நடக்கிறது. அதாவது, இந்தியன் திரைப்படம் அப்பாவுக்கும் மகனுக்குமான கதை. இந்தியன்-2 சேனாதிபதிக்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையான கதையாகவும் உருவாகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com