உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித் குமார் இந்தியாவில் தனது வாகனப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் திரைத்துறையைக் கடந்து துப்பாக்கிச் சுடுதல், மோட்டார் பந்தயம், சிறிய வகையிலான ஹெலிகாப்டர் உருவாக்கம் என பலவற்றில் தீவிரமான ஆர்வம் கொண்டவராக உள்ளார். இவற்றில் சமீபத்தில் இணைந்தது வாகனப் பயணம்.
கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் நடிகர் அஜித்குமார் பைக் பயணம் மேற்கொண்டார். அவரது பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | கதாநாயகனானார் ‘ராட்சசன்’ வில்லன்
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்காக திரும்பிய நடிகர் அஜித்குமார் அதனை நிறைவு செய்து மீண்டும் பைக் பயணத்தில் ஈடுபட்டார்.
தற்போது அவர் உலக சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது பைக் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது புகைப்படமும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.