
பாபா மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைத்துள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.
ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இதையும் படிக்க: விஜய் ஆண்டனியின் தமிழரசன் வெளியீட்டு தேதி அறிவிப்பு
பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் மறு படத்தொகுப்பும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை புதுப்பொழிவுடன் மேம்படுத்தி டிச.10 ஆம் தேதி மறுவெளியீடு செய்தனர்.
அதிகாலைக் காட்சியிலும் ரசிகர்கள் இப்படத்தைக் கண்டனர்.
இந்நிலையில், ‘பாபா’ மறுவெளியீட்டில் இதுவரை ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.