நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ளனர்.
வலிமை படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்திற்காக இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.
திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்க: என் இயக்கத்தில் விஜய் நடிப்பார்: விஷால்
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் எச்.வினோத்திடம் ‘அஜித் என்பவர் யார்’? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு ‘தீர்க்கதரிசி’ என பதிலளித்துள்ளார்.
முன்னதாக, இதே நேர்காணலில் ‘ஒருவர் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக ஒட்டுமொத்தத் தொழிலையே பொதுமைப்படுத்தாதீர்கள். அஜித் சாருக்கு கூட இப்படி தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கிப் பேசுவது பிடிக்காது. அவரைப் பொறுத்தவரை படத்தின் வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. படக்குழுவினர் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும். மதிக்கப்பட வேண்டும். வெற்றி வரும் போகும் அதற்காக மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்பார்’ என வினோத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
3 மளிகைக் கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

தவெக கூட்டணியில் தொடா்வோம்: கே.எம். காதர் மொகிதீன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



