
துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா' பாடல் யூடியூப்பில் 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க- ’பிச்சைக்காரன் 2’ வெளியீடு எப்போது? புதிய அப்டேட்
படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் அறிமுக பாடலான ‘சில்லா..சில்லா’ பாடல் யூடியூப்பில் இதுவரை 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...