காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

2 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்ட மேடையில் விஜய்! தமனுடன் அனிருத் இசை

2 ஆண்டுகளுக்கு பிறகு வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசவுள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2022, 3:10 am

DIN

2 ஆண்டுகளுக்கு பிறகு வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசவுள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 99 மில்லியன் (9.9 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 25 மில்லியன் (2.5 கோடி) பார்வையாளர்களையும், மூன்றாவது பாடல் ‘அம்மா’ 60 லட்சம் பார்வையாளர்களையும் யூடியூபில் கடந்துள்ளது. 

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள்(டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இசையமைப்பாளர் தமன் நேரடியாக சென்று பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அவருடன் அனிருத் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Story image

நடிகர் விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதில், விஜய்யின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறாததால், விஜய்யின் பேச்சை கேட்க அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது. புத்தாண்டு அன்று மாலை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.