

நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள உடன்பால் திரைப்படத்தின் டிரைலர் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குடும்பத்தில் நடக்கும் சொத்து பணப் போட்டி தொடர்பான கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பால். இதில் நடிகர்கள் சார்லி, லிங்கா, விவேக் பிரசன்னா, காயத்ரி, அபர்ணதி மற்றும் தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கியுள்ளார். டி கம்பெனி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | ஆஸ்கர் தேர்வுப் பட்டியலில் 4 இந்திய படைப்புகள்
அதிகாரப் போட்டியை உவமையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
வித்தியாசமான வகையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.