ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: உறவினர்கள் வருகையால் களைகட்டிய பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்களை அனுப்பி போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் பிக் பாஸ்.

News image
Updated On :27 டிசம்பர் 2022, 6:48 am

DIN

பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்களை அனுப்பி போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் பிக் பாஸ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் நானிமேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.

இந்நிலையில், 12-வது வாரம் தொடங்கியுள்ள நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களும் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்த ‘ஃப்ரீஸ், ரிலீஸ்’ டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது.

இன்றைய ப்ரோமோவில், மைனா, அமுதவாணன், கதிரவன், விக்ரமன் உள்ளிட்டோரின் பெற்றோர்களும், மனைவி, குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

இதனால், துள்ளி குதிக்கும் போட்டியாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். ரசிகர்களும் இந்த நிகழ்வை காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.