பிக் பாஸில் தனலட்சுமி பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் போட்டியிலிருந்து நேற்று வெளியேறிய தனலட்சுமி பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸில் தனலட்சுமி பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் போட்டியிலிருந்து நேற்று வெளியேறிய தனலட்சுமி பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, ஜனனி ஆகியோர் நானிமேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.

11-வது வாரத்தின் முடிவில் மக்கள் பிரதிநிதியாக முதல்முறையாக பங்கேற்ற தனலட்சுமி நேற்று எலிமினேட் செய்யப்பட்டார்.

12-வது வாரத்தில் பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் நிகழ்விற்காக ஆரம்பம் முதலே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த தனலட்சுமி பெரும் ஏமாற்றத்துடன் வீட்டைவிட்டு நேற்று அழுகையுடன் வெளியேறினார்.

பிக் பாஸ் தொடங்கியது முதலே சக போட்டியாளர்களிடம் கத்தி பேசி சண்டையில் ஈடுபட்டு வந்த தனலட்சுமியை பலமுறை கமல் கண்டித்துள்ளார். அதேபோல், இந்த சீசனில் தனலட்சுமியின் தவறுக்காக தான் குறும்படம் முதல்முறையாக போடப்பட்டது.

ரசிகர்களின் கலவையான விமர்சனங்களுடன் வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு நாளொன்றுக்கு ரூ. 15,000 வீதம் 76 நாள்களுக்கு ரூ. 11.40 லட்சம் சம்பளமாக தனலட்சுமி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பிக் பாஸ் டாஸ்க்கின் போது சிறப்பான நடிப்பு திறமையை தனலட்சுமி வெளிப்படுத்திய காரணத்தினால், அவருக்கு திரையுலகில் பல்வேறு வாய்ப்புகளும் காத்திருக்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com