‘அன்புனா என்ன?’ - விஜய் கூறிய குட்டி ஸ்டோரி! 

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் இந்த முறையும் குட்டி ஸ்டோரி கூறியுள்ளார். அன்பை பற்றிய கதை அது. 
‘அன்புனா என்ன?’ - விஜய் கூறிய குட்டி ஸ்டோரி! 
Published on
Updated on
1 min read

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 26 மில்லியன் (2.6 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 24) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. எப்பொதும் போல நடிகர் விஜய் இந்த முறையும் ஒரு குட்டிக் கதை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: 

ஒரு குடும்பம். அதில் அம்மா, அப்பா, அண்ணா, தங்கச்சி. அப்பா தினமும் வேலைக்கு போய்ட்டு வரும்போது சாக்லெட் வாங்கிட்டு வருவார். ரெண்டு பசங்களுக்கும் தருவார். இதில் தங்கச்சி பாப்பா சாக்லெட்டை அப்போதே தின்றுவிடும். அண்ணன் அடுத்த நாளைக்கு பள்ளிக்கு செல்லும் போது சாப்பிடலாம் என ஒரு இடத்தில் மறைத்து வைப்பார். அண்ணன் போனதும் தங்கச்சி பாப்பா மறைத்து வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து தின்றுவிடும். இது தினமும் நடக்கும். ஒருநாள் தங்கச்சி பாப்பா அண்ணனிடம், “அன்பு அன்புனு சொல்றாங்களே அன்புனா என்ன அண்ணா ?” என கேட்கும். அப்போது அந்த அண்ணா, “நீ உன்னோட சாக்லெட்டையும் சாப்டுற்ற, எனக்கு வெச்ச சாக்லெட்டையும் சாப்டுற்ற. அது தெரிஞ்சும் தினமும் அங்கயே சாக்லெட் வெக்குறேன்ல அதுதான்மா அன்பு” என கூறுவார். அன்புதான் உலகத்தை வெல்லும் ஆயுதம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.