
மலையாளத்தில் கலைபடங்கள், வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். தீபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சுஜித் சுதாகரன் இந்தப் படத்துக்கு காஷ்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...