
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 26 மில்லியன் (2.6 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 3வது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வாரிசு படத்தில் 5 பாடல்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
1. ரஞ்சிதமே: பாடியவர்கள்: விஜய், எம்.எம். மானசி.
2. தீ தளபதி: பாடியவர்கள்: தமன், சிம்பு
3. சோல் ஆஃப் வாரிசு: பாடியவர்- சித்ரா
4. வாரிசு என்ட்ரி: பாடியவர்-அனிருத்
5. வாரிசு மெலோடி: பாடியவர்கள்- சித் ஸ்ரீராம், ஜோனிடா காந்தி.