பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தள்ளிப்போகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published On :

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்தை ஜியோ பேபி இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 

இயக்குநர்  ஆர். கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ராகுல், ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பிலிருந்து படக்குழு பின்வாங்கியுள்ளது. 

ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து இரு படங்களை வெளியிடுவது வசூல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.