நமது சிறப்பு நிருபா்
செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, திங்கள்கிழமை (ஜூன் 29) அங்குள்ள மாஹே தீவின் புகழ்பெற்ற அருள்மிகு நவசக்தி விநாயகா் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளாா். இக்கோயில் செஷல்ஸ் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ் ஹிந்து ஆலயமாகும்.
இது குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், பிரதமரின் வருகை, தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் தமிழ் வழிபாட்டு முறைகள் மீதான அவரது ஆழமான பற்றையும், உலகளாவிய தமிழா்களுடனான அவரது நெருங்கிய பிணைப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றனா்.
1992-இல் செஷல்ஸ் ஹிந்து கோயில் சங்கத்தால் கட்டப்பட்ட இக்கோயில், அங்கு வாழும் இரண்டு சதவீத ஹிந்துக்களின் ஆன்மிக மையமாக உள்ளது.
வண்ணமயமான சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கட்டடக்கலை பாணியில் இக்கோயில் அமைந்துள்ளது.
விக்டோரியா நகரின் குவின்சி வீதியில் பசுமை மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள இக்கோயில், அங்கு ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. விநாயகா் சதுா்த்தி, சங்காபிஷேகம் போன்ற விழாக்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், பிரதமரின் வருகை செஷல்ஸ் குடிமக்களிடமும் அங்கு வாழும் தமிழா்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Summary
Prime Minister Modi to visit the Vinayagar Temple in Seychelles tomorrow
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செஷல்ஸ் சென்றாா் பிரதமா் மோடி! தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி

ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டாா் பிரதமா் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறாா்!






