பிரதமர் நரேந்திர மோடி உடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செல்பொன் வாயிலாக உரையாடியுள்ளார்.
மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் குறித்து, பிரதமர் மோடியுடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு செல்போன் வாயிலாக இன்று (ஆக. 6) உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலில், இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் கூட்டுறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“சமீபத்தில், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பிரதமர் நெதன்யாகு மற்றும் பிரதமர் மோடி தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், இருநாடுகளின் தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால், மேற்காசிய நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் பிரதமர்கள் உரையாடியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
Summary
Israeli PM Netanyahu has spoken with PM Modi over the phone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!
நியூயார்க் மேயர் வெறுப்பைப் பரப்புகிறார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

விக்ரம்-1 சாதனை: இந்தியாவுக்குப் பெருமை - பிரதமர் மோடி!
விடியோக்கள்

சர்க்கரை உண்மையிலேயே தவிர்க்கப்பட வேண்டியதா? | Health Care | Lifestyle




