தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

மரம் நடுவது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக...

News image

நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :26 ஜூலை 2026, 3:58 pm IST

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் இல்லங்கள்தோறும் தேசியக் கொடியை ஏற்றியதைப்போன்று, இந்த ஆண்டும் இல்லங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் இன்று (ஜூலை 26) வேண்டுகோள் விடுத்தார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விதவிதமான விநாயகர் சிலைகளைக் காட்டிலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் இவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

''உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மண் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைத்து வழிபடுவோம் என பலர் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உலகளவிலான முக்கிய சவாலாக நெகிழி மாறியுள்ளது. ஒருமுறை பயன்படும் நெகிழி, அது மக்குவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

பிகாரில் கழிவில் இருந்து செல்வம் என்ற தலைப்பில் குப்பை மறுசுழற்சிசெய்யப்பட்டு அமரும் மேஜைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு மேஜைக்கு சுமார் 40 கிலோ நெகிழி பயன்படுத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகள், பூங்காக்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த முயற்சியின் மூலம் சுற்றுச்சூழல் நலன் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் மகளிர் இணைந்து தயாரித்த மூலிகை தேநீர் வெளிநாட்டவர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்சார்பு என்ற புதிய நறுமணத்தை கலந்து கொடுப்பதால் கூடுதல் மணமுடன் உள்ளது.

லக்கிவாலா கிராமத்தில் சுய உதவிக் குழு பெண்கள், மூலிகைத் தேநீரைத் தயாரித்துள்ளனர். அதிமதுரம், மஞ்சள், சோம்பு உள்ளிட்ட மூலிகைப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகைத் தேநீர் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கும்பமேளா உள்ளிட்ட பெருவிழாக்களில் இந்த மூலிகை தேநீர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு வரும் அயல் நாட்டவர் பலரையும் இது கவர்ந்துள்ளது. பெண்களின் சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்தின் தொடக்கமாக அமையும் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நாடு முழுவதும் அன்னையின் பெயரில் ஒரு மரத்தை நட வேண்டும். குஜராத் மாநிலம் அம்தவாதிலே ஒரு மணிநேரத்திற்குள் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் என இப்பணியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது.

ஒரே நாளில் 35 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை சில ஆண்டுகளில் அடர்ந்த நகர்ப்புற காட்டை உருவாக்கும் என நம்புகிறேன். மக்கள் அனைவரும் அன்னையின் பெயரில் ஒரு மரத்தை நட வேண்டும். இதன்மூலம் எதிர்கால சந்ததியினருக்கு வளமான சுற்றுச்சூழலை நாம் விட்டுச்செல்ல முடியும்'' என பிரதமர் மோடி பேசினார்.

Summary

Plant a tree in your mother's name PM Modi's appeal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.